/* */

ஆன்லைனில் மலிவு விலையில் முட்டை விநியோகம் செய்வதாக மோசடி ? பண்ணையாளர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் குறைந்த விலையில் முட்டை விற்பனை செய்வதாக மோசடியில் இறங்கியுள்ள நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆன்லைனில் மலிவு விலையில் முட்டை விநியோகம் செய்வதாக மோசடி ? பண்ணையாளர்கள் அதிர்ச்சி
X

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் சிங்கராஜ் பேசினார்.

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நாமக்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்ட முடிவில், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் முன்னணியில் உள்ளது. இம்மணடலத்தில் நாள்தோறும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன.

இங்கிருந்துதான் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு விற்பனைக்காகவும் தினசரி முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ரூ.4.50 முதல் ரூ.4.80 வரை ஆகிறது. முட்டை விற்பனை விலை ரூ.5.15 ஆக என்இசிசி நிர்ணயம் செய்துள்ளது.

கோழித் தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வால் முட்டை உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஆன் லைன் மூலம் முன் பணம் செலுத்தினால் ஆண்டு முழுவதும் ஒரு முட்டை ரூ.2.24 க்கு பொது மக்களின் வீடுகளுக்கே விநியோகம் செய்வதாக விளம்பரம் செய்து வருகிறது.

இது சாத்தியமற்ற ஒரு திட்டமாகும்.முன் பணம் பெற்றுக்கொண்டுபொது மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை நம்பி பொது மக்கள் யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். நாங்கள் இந்த நிறுவனத்தின் சென்னை மற்றும் கோவை அலுவலங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது உரிய பதில் கிடைக்கவில்லை.

உற்பத்தி விலையை விட பாதி விலையில் முட்டைகளை வழங்குவது என்பது யாராலும் முடியாத செயல். எனவே தமிழக அரசு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து பொது மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டும்.

விரைவில் எங்கள் சங்க பொதுக்குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.

கோழிப்பண்ணையாளர்கள் சங்க இணை செயலாளர்கள் ஆனந்த், சசிகுமார், இயக்குனர்கள் துரை, ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  6. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’