/* */

தோல்வியை கண்டு துவளாமல் மன உறுதியோடு படித்தால் வெற்றி நிச்சயம் - நாமக்கல் கலெக்டர்

பொதுத்தேர்வில் தோல்வியை கண்டு துவள வேண்டாம் மன உறுதியோடு மீண்டும் படித்தால் வெற்றி நிச்சயம். நாமக்கல் கலெக்டர் ஆலோசனை

HIGHLIGHTS

தோல்வியை கண்டு துவளாமல் மன உறுதியோடு படித்தால் வெற்றி நிச்சயம் - நாமக்கல் கலெக்டர்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனம் சோர்வடைய வேண்டாம், மீண்டும் முயன்றால் வெற்றி பெறலாம் என்று கலெக்டர் ஆறுதல் கூறியுள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி, முடிவுகள் வரப்பெற்றுள்ளன. பொதுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே ஒரு குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை. இக்காலகட்டத்தில் நம் சமுதாயத்தில் உள்ள மிகப்பெரிய பல தொழிலதிபர்கள், அடிப்படை கல்வியைக்கூட முழுமையாக முடிக்காதவர்கள். இருப்பினும் அவர்களுடைய தனிப்பட்ட கடின உழைப்பாலும் திறனாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர். வறுமையை வெல்லும் சக்தி கல்விக்கு உள்ளது என்பதை நான் அறிவேன். இருப்பினும் கல்வியால் மட்டுமே அது சாத்தியம் என்று கூறிவிட முடியாது. கல்வியுடன் இணைந்து ஒரு நபரின் தனித்திறன் மற்றும் கடின உழைப்பு மிகவும் முக்கியமாகும்.

கொரோனா கால இடைவெளி குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காரணத்தால் கூட பலர் தேர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்திருந்தால் அதை நினைத்து கவலையடைய வேண்டாம். மற்றவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள், அதிக மதிப்பெண்கள் வாங்கிவிட்டார்கள் என்று உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு உங்களை நீங்களே தாழ்த்தியும், குறைத்தும் மதிப்பிடாதீர்கள். இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் என்று ஒன்று உள்ளது. அத்திறமையை நீங்கள் அடையாளம் காணுங்கள் உங்களால் வாழ்க்கையில் வெல்ல முடியும்.

தேர்வு முடிவுகள் வந்ததில் இருந்து, ஒரு சில குழந்தைகள் தேர்ச்சி பெறவில்லை அல்லது மதிப்பெண்கள் குறைவு என்று தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். இம்முடிவு முற்றிலும் தவறானது சட்டத்திற்கு எதிரானது. நீங்கள் எடுக்கும் இம்முடிவால் உங்கள் மீது அன்பு கொண்ட பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் பெரும் மன அதிர்ச்சிக்கு தள்ளப்படுவார்கள். ஆதலால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் மதிப்பெண் குறித்தோ தோல்வி குறித்தோ பயம் வேண்டாம். அப்படி உங்களுக்குள் மனவேதனை இருப்பின் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மாவட்ட கலெக்டராகிய என்னையும், எங்கள் அலுவலர்களிடமும் ஆலோசனைக்கு நீங்கள் அணுகலாம்.

மணவ மாணவிகளுக்கு உதவியும், சேவையும், வழிகாட்டவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். குழந்தைகள் உதவி எண் ஆன 1098 மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழந்தைகளுக்கான உதவி எண்ணான 9486111098 என்ற எண்களை அணுகி எங்கள் உதவியையும், சேவையையும், ஆலோசனைகளையும் பெறலாம். பெரும்பாலான பெற்றோர்கள் தான் அடைய முடியாத உயரத்தை பொருளாதார ரீதியாகவும், ஒரு நல்ல பணியிலும் நம் குழந்தை அடைந்து வாழ வேண்டும் என்று, குழந்தையின் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்கிறீர்கள். அதனால்தான் குழந்தைகள் தேர்ச்சி அடையாத போதோ அல்லது குறைந்த மதிப்பெண்கள் வாங்கும்போதோ உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாத காரணத்தால் அது குழந்தையின் மீது வெறுப்பாகவும் வெளிப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. இந்த மாதிரியான நேரத்தில் தான் உங்கள் குழந்தைக்கு அளவு கடந்த அன்பும் அரவணைப்பும் உங்களிடமிருந்து தேவைப்படுகின்றது. அந்த நேரத்தில் நீங்கள் இந்த முறை முடியாவிட்டால் அடுத்து முறை கண்டிப்பாக உன்னால பாஸ் பண்ணி அதிக மார்க் வாங்க முடியும், நான் உன்னை நம்புகிறேன் என்று கூறி குழந்தைகளை ஊக்கவிக்க வேண்டும். அப்படி செய்தால் குழந்தைகள் பொறுப்புடன் படித்து அதிக மதிப்பெண் பெற்று அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். பெற்றோர்களாகிய உங்களுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் மேற்கண்ட போன் நம்பர்களில் கலெக்டர் மற்றும் அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!