/* */

நாமக்கல்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர், சிறப்பு பார்வையாளர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர், சிறப்பு பார்வையாளர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்: வாக்கு எண்ணிக்கை மையத்தில்  கலெக்டர், சிறப்பு பார்வையாளர் ஆய்வு
X

நாமக்கல் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர் ஸ்ரேயா சிங், சிறப்பு பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய, வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுஎண்ணிக்கை மையங்களுக்கு வந்து சேர்ந்தன. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மையங்கள் 24 மணி நேரமும் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் உள்ள 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் அடங்கிய எலக்ட்ரானிக் வாக்கப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பூத் வரிசைப்படி வைக்கப்பட்டு, அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22ம் தேதி, மாவட்டத்தில் உள்ள 3 மையங்களில் எண்ணப்படுகிறது.

நாமக்கல்: நாமக்கல் - மோகனூர் ரோட்டில் உள்ள, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிலயில் நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர் , சேந்தமங்கலம், வேலூர் , வெங்கரை ஆகிய 9 டவுன் பஞ்சாயத்துக்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

ராசிபுரம்: ராசிபுரம் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ராசிபுரம் நகராட்சி மற்றும் அத்தனூர், பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய 7 டவுன் பஞ்சாயத்துக்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு எளையாம்பாளையம், விவேகானந்தா மகளிர் கல்லூரியில் திருச்செங்கோடு நகராட்சி, பள்ளிபாளையம் நகராட்சி, குமாரபாளையம் நகராட்சி மற்றும் மல்லசமுத்திரம், படைவீடு, ஆலாம்பாளையம் ஆகிய 3 டவுன் பஞ்சாயத்துக்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு :

தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு, தனித்தனி அறைகளில் வரிசையாக வைக்கப்பட்டு, அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களை, மாவட்ட தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா, கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்படும் வரவேற்பு அறை, இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஓட்டு எண்ணிக்கை :

நாமக்கல் முனிசிபாலிட்டி தேர்தலில் பதிவான ஓட்டுகள் மொத்தம் 8 மேஜைகளில், 13 சுற்றுக்களாக எண்ணப்படும். ராசிபுரம் முன்சிபாலிட்டி ஓட்டுகள் 8 மேஜைகளில் 6 சுற்றுக்களாக எண்ணப்படும். குமாரபாளையம் நகராட்சிக்கு 8 மேஜைகளில் 9 சுற்றுக்களாக எண்ணப்படும். பள்ளிபாளையம் நகராட்சி ஓட்டுகள் 6 மேஜைகளில் 7 சுற்றுக்களாக எண்ணப்படும். திருச்செங்கோடு முனிசிபாலிட்டி ஓட்டுக்கள் 8 மேஜைகளில் 11 சுற்றுக்களாக எண்ணப்படும்.

19 டவுன் பஞ்சாயத்து ஓட்டுகள்: பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்தில் மட்டும் 3 மேஜைகளில் எண்ணப்படும், மற்ற டவுன் பஞ்சாயத்து ஒட்டுகள் தலா 2 மேஜைகளில், 6 முதல் 12 சுற்றுக்கள் வரை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Updated On: 20 Feb 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!