/* */

வகுப்பறையின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்: கட்டிடம் கட்டித்தரலாமே

மோகனூர் அருகே அரசு பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் உள்ளது.

HIGHLIGHTS

வகுப்பறையின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்: கட்டிடம் கட்டித்தரலாமே
X

மோகனூர் அருகே எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டித்தரக்கோரி மனு அளிப்பதற்காக பெற்றோர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இது குறித்து மோகனூர் அருகே உள்ள, எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மருதவீரன் தலைமையில், திரளான பெற்றோர்கள் நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

எஸ்.வாழவந்தியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 177 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிக்கு, போதிய வகுப்பறைகள் இல்லை. அருகில் உள்ள கலையரங்கிலும், மரத்தடியிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவலநிலை உள்ளது. 2019ம் ஆண்டு, கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக் கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

அதையடுத்து, இடம் வாங்கிக் கொடுத்தால், கட்டிடம் கட்டித்தருவதாக மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர். பள்ளிக்கு அருகில் 30 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தை அளவீடு செய்து, பள்ளிக்கல்வித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கலெக்டருக்கு கடிதம் வைத்து, அவர் எங்களுக்கு பரிந்துரை செய்தால் மட்டுமே நாங்கள் அளவீடு செய்யமுடியும் என தாசில்தார் தெரிவித்துவிட்டார்.

இது தொடர்பாக அக். 2ல் நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்தில், புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் தலையீடு காரணமாக அதுவும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் பள்ளியை நேரில் பார்வையிட்டு, விரைவில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 Nov 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்