/* */

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த சமூக நீதி கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சமூக நீதி கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த சமூக நீதி கூட்டமைப்பு கோரிக்கை
X

நாமக்கல்லில் ஓபிசி சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பி.சி, எம்.பி.சி, டி.என்.டி சமூகங்களின், சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. தொட்டியநாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தொட்டிய நாயக்கர், குரும்ப கவுண்டர், முத்தரையர், போயர், கொங்கு வேளாளர், ஜங்கமர், ஆண்டிபண்டாரம், நாவிதர், வண்ணார் உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசு, சென்செஸ் சட்டத்தின் படி, 2021 சென்செஸ் கணக்கெடுப்பில், ஓபிசி பிரிவில், ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் சேர்க்க வேண்டும். மாநில அரசு, புள்ளி விபர சட்டப்படி 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை பாதுகாக்க உடனடியாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆகஸ்ட் 7-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள சமூகநீதி மாநாட்டில் அனைத்து சமுதாயத்தினரும் திரளாக கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கணேஷ் நன்றி கூறினார்.

Updated On: 14 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?