/* */

தபால்துறை சார்பில் மார்ச் 3ம் தேதி வாடிக்கையாளர் குறைதீர் முகாம்

மாநில அளவில், தபால்துறை வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்க்கும் முகாம், வரும் மார்ச் 10ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தபால்துறை சார்பில் மார்ச் 3ம் தேதி வாடிக்கையாளர் குறைதீர் முகாம்
X

இது குறித்து நாமக்கல் கோட்ட தபால்தறை கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தபால்துறை சார்பில், மாநில அளவில் நடத்தப்படும் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் நாள் முகாம், வருகிற மார்ச் 10ம் தேதி 11 மணிக்கு, சென்னையில் உள்ள தலைமை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்களின் அஞ்சல் துறை சம்மந்தமான குறைகள் எதேனும் இருப்பின் நேரில் தெரிவித்து குறைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.

பொதுமக்களுக்கு அஞ்சல் சம்மந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின், புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரிலோ அல்லது துணை இயக்குனர், (எஸ்பிஅண்ட்எப்எஸ்) தலைமை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம் சென்னை 600 002 என்ற முகவரிக்கு மார்ச் 4ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். .இந்த என்ற pgtn@indiapost.gov.in -என்ற இமெயில் முகவரிக்கு மனுக்களை அனுப்பி வைக்கலாம். தபால்துறையில், மணியார்டர், விபிபி, விபிஎல், பதிவு தபால், விரைவு தபால், போஸ்டல் இன்சூரன்ஸ் குறித்த புகார்கள் இருப்பின் அது குறித்து முழு விபரங்களையும் மனுவில் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 Feb 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...