/* */

நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது. பொதுக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட கியூவில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
X

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட, போதமலை கீழூர் ஊராட்சி, தொடக்கப்பள்ளி வாக்குபதிவு மையத்தில், காலை 7 மணிக்கு திரளான மலைவாழ்மக்கள், ஓட்டுப்போடுவதற்காக நீண்ட கியூவில் நின்றனர்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது. பொதுக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட கியூவில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

நாமக்கல் பாராளுமன் தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளவனர், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,30,584 வாக்காளர்கள், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள், பரமத்திவேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், திருச்செங்கோடு தொகுதியில் 2,30,415 வாக்காளர்கள், சங்ககிரி தொகுதியில் 2,69,270 வாக்காளர்கள் என, 6 சட்டசபை தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

40 வேட்பாளர்கள்:

நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தடுகின்றன. மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 692 வாக்குப்பதிவு மையங்களில், 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குசாவடிகளில் பயன்படுத்துவதற்காக தேர்தல் கமிஷன் மூலம் 5,665 எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான 2,301 விவிபேட் இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்குள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 174 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு நுன் பார்வையாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 1060 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்காளர்கள் ஆர்வம்:

இன்று பல வாக்குச்சாவடிகளில் அதிகாலை நேரத்தில், வாக்கப்பதிவு துவங்குவதற்கு முன்பே ஏராளமான ஆண்களும் பெண்களும், வாக்களிப்பதற்காக ஆர்வத்துடன் கியூவின் காத்திருந்தனர். முன்னதாக 6.30 மணிக்கு, வாக்குச்சாவடிக்கு வருகை தந்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டது. பின்னர் சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் கியூ வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஆட்சியர் ஆய்வு:

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான உமா, நாமக்கல் நகராட்சியில் உள்ள நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, ராமாபுரம் புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சின்ன முதலைப்பட்டி, நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து, தொடர்ந்து, வாக்கு சாவடி மையங்களுக்கு வருகை தரும் வாக்காளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மகளிர், மாதிரி ஓட்டுச்சாவடிகள்:

மத்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்பேரில், ராசிபுரம் சட்டசபை தொகுதியில், ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி, சேந்தமங்கலத்தில் குப்பநாய்க்கனூர் அரசு தொடக்கப்பள்ளி, நாமக்கல்லில் அய்யம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, ப.வேலூரில் பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோட்டில், ராஜகவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, குமாரபாளையத்தில், குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைபள்ளி ஆகிய இடங்களில், மகளிர் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ராசிபுரம் சட்டசபை தொகுதியில், ஓ.சவுதாபுரம் தொடக்கப்பள்ளி, சேந்தமங்கலத்தில் துத்திக்குளம் அரசு நடுநிலைபள்ளி, நாமக்கல்லில், கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி, ப.வேலூரில் பரமத்தி பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி, திருச்செங்கோட்டில் கீழப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, குமாரபாளையத்தில் செங்குட்டுபாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில், மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஓட்டுப்போட ஏதுவாக, ஓட்டுச்சாவடிகளில் உதவி மையம், சக்கர நாற்காலிகள், சாய்வு தள வசதி, வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு நீர் கரைசல், நிழலுக்காக சாமியானா பந்தல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடையற்ற மின் வசதி, முதலுதவி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1௦௦ சதவீதம் வாக்களிக்க வேண்டுகோள்:

நாமக்கல் லோக்சபா தொகுதியில் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும், துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அச்சமின்றி வாக்களிக்கலாம். தகுதியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 19 April 2024 2:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை