/* */

கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக போலீசார் ரூ.16.69 லட்சம் நிதியுதவி

Financial Assistance- கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு, சக போலீசார் ரூ. 16.69 லட்சம் நிதி உதவி வழங்கினர்.

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக போலீசார் ரூ.16.69 லட்சம் நிதியுதவி
X

நாமக்கல்லில் கொரோனா தொற்றால் உயிரிழந்த காவலர் விஜயகுமாரின் குடும்பத்திற்கு சக போலீசார் ரூ.16.69 லட்சம் நிதி உதவி வழங்கினர்.

Financial Assistance- சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்ந்தவர் விஜயகுமார் (40), இவர் வேலூர் மாவட்ட போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து, நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு அக். 11-ஆம் தேதி விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பத்மபிரியா இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில், 2002 காவலர் உதவும் உறவுகள் அமைப்பின் சார்பில், அவருடன் பயிற்சி பெற்ற தமிழகம் முழுவதும் பணியில் உள்ள சக போலீசார் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கினர். இதன்மூலம் ரூ.16 லட்சத்து 69 ஆயிரத்து 165 பெறப்பட்டது.

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி உதவியை, விஜயகுமாரின் மகள் சஞ்சனா, மகன் பிரஜித் ஆகியோரிடம் உதவும் உறவுகள் அமைப்பின் நிர்வாகிகள் காசோலையாக வழங்கினர். நிகழ்ச்சியில் விஜயகுமாரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், நாமக்கல் மாவட்ட போலீசார் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்