/* */

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரி: இன்று மோடி திறந்து வைக்கிறார்

நாமக்கல்லில், ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரியை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

HIGHLIGHTS

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரி: இன்று மோடி திறந்து வைக்கிறார்
X

இன்று திறப்பு விழா நடைபெற உள்ள நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம், அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது.

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை அமைக்க, மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில், மத்திய மற்றும் மாநில அரசு நிதியில் இருந்து, ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க, 2020ம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கொரோனா ஊரடங்கு நேரத்திலும், வடமாநில தொழிலாளர்களை வைத்து மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இக்கல்லூரியில் 150 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மருத்துவக்கல்லூரியை இன்று 12ம் தேதி மாலை 4 மணிக்கு, புதுடெல்லியில் இருந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார். இதையொட்டி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாலியா, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Updated On: 12 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!