/* */

நாமக்கல் மாரியம்மன் கோவிலின் ஒரு பகுதி இடிப்பு; பக்தர்கள் அதிர்ச்சி

namakkal news, namakkal news today-நாமக்கல்லில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பலப்பட்டறை மாரியம்மன் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்படுவதால், பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாரியம்மன் கோவிலின் ஒரு பகுதி இடிப்பு; பக்தர்கள் அதிர்ச்சி
X

namakkal news, namakkal news today- ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலின் ஒரு பகுதி, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டது.

namakkal news, namakkal news today- நாமக்கல் நகரின் மத்தியில், மெயின் ரோட்டின் ஓரம், நூறாண்டுக்கு மேலாக பழமை வாய்ந்த பலப்பட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்த சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் மே மாதம் துவங்கி, 3 மாதகாலம் தேர்த்திருவிழா நடைபெறும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, பக்தர்களின் வசதிக்காக, இக்கோவிலின் வடக்குப்பகுதியில் இருந்து வந்த, பொதுப்பாதையை ஆக்கிரமித்து கோவில் கட்டிடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி நாமக்கல்லைச் சேர்ந்த, பாப்பாயி என்பவர், பொதுப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

பல ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், பொதுப் பாதையை ஆக்கிரமித்து கோவில் கட்ட வேண்டும் என எந்த கடவுளும் கேட்கவில்லை, கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி. கோர்ட்டின் கண்களை மறைக்க முடியாது, கோவில் ஆக்கிரமிப்பாக இருந்தாலும், அதனை அகற்ற கோர்ட்டிற்கு உரிமை உண்டு. எனவே கோயில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை, இரு மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு, கோவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணியில். இன்று நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை முதலே ஜேசிபி வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு வடக்குப்புற சுவர், செல்லாண்டி அம்மன் கோவில், உற்சவர் சிலைகள் வைக்கும் அறை உள்ளிட்ட 20 அடி நீளம், 12 அடி அகலத்திற்கு உட்பட்ட பாதையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில் இடிக்கப்படும் நிலையில், கோவிலை சுற்றிலும், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாரியம்மன் கோவிலின் ஒரு பகுதி, இடிக்கப்பட்டு வரும் சம்பவம், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 Jan 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!