மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி துவக்கம்
namakkal news, namakkal news today- மோகனூர் அருகே ஒருவந்தூரில் ரூ. 29.20 லட்சம் மதிப்பீட்டில் ரிங் ரோடு அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS

namakkal news, namakkal news today- மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூரில் ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணியை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், மோகனூர்ஊராட்சி ஒன்றியத்தில், ஒருவந்தூர் கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்து மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடைபெற்ற வந்தது. இதையொட்டி இப்பகுதியில் ரிங் ரோடு அமைக்க வேண்டும் என்று, ஒருவந்தூர் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், ஒருவந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து கடைவீதி வழியாக ஊருக்குள் செல்லும் வகையில் 800 மீட்டர் நீளமுள்ள மெயின் ரிங் ரோடு அமைக்கும் பணிக்கு, தனது சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 29 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்தார். இதையொட்டி ரோடு அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பூமி பூஜையில் கலந்துகொண்டு ரிங் ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். மோகனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவலடி, மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் கைலாசம், ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவில் தர்மகர்த்தா ராஜேந்திரன், நாச்சிமுத்து, கருமன்னன். பொன்னுசாமி, வரதராஜன், முத்துசாமி, பழனிசாமி, மோகனூர் பிடிஓ முனியப்பன், பஞ்சாயத்து செயலாளர் அசோகன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.