நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 59,753 பேருக்கு கொரோனா தடுப்பூசிசெலுத்தி சாதனை

நாமக்கல் மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி ஒரே நாளில் மொத்தம் 59,753 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 59,753 பேருக்கு கொரோனா தடுப்பூசிசெலுத்தி சாதனை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி 700 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 85,375 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதேபோல் 19ம் தேதி, 325 மையங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமில் 31,448 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 3ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 500 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 476 நிலையான முகாம்கள், மற்றும் 24 நடமாடும் குழுக்கள் மூலமாக பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மாவட்டத்தில் ஒரே நாளில் 59 ஆயிரத்து 753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இலக்கை மிஞ்சி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முகாம்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 4,420 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

Updated On: 27 Sep 2021 3:00 AM GMT

Related News