/* */

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியில் நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் துறையினர் எச்சரிக்கை.

HIGHLIGHTS

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக  நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை
X

பைல் படம் 

இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சிறப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளத்திற்கு குறைவாக வழங்குதல், குறிப்பிட்ட கால நிர்ணயம் இல்லாமல் நீண்ட நேரம் வேலை வாங்குவது, அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்களுக்கு முன்பணம் வழங்கி அவர்களிடம் கூடுதல் வேலை வாங்குவது, ஈமச்சடங்கிற்கு கூட குடும்பத்தினரை சென்று பார்க்க அனுமதிக்காதது, உடல் சார்ந்த வன்முறைக்கு தொழிலாளர்களை உட்படுத்துவது, போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தால் அத்தொழிலாளி கொத்தடிமை தொழிலாளியாவார்.

கொத்தடிமைகளாக நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, தொழிலாளர் உதவி௮+ கமிஷனர் (அமலாக்கம்) மற்றும் காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் தெரிவிக்கலாம். 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். மேலும் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் உரிமையாளர்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளுக்கு குறையாத வகையில் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

Updated On: 24 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது