/* */

ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா

Erode news- ஈரோடு மாவட்டம் ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து முகாம் நிறைவு நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
X

Erode news- மாநில அளவிலான கைப்பந்து நிறைவு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து முகாம் நிறைவு நடைபெற்றது.

ஈரோடு எக்ஸலென்ஸ் அகாடமி மற்றும் ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் மாநில அளவிலான கைப்பந்து முகாம் கடந்த பத்து நாட்களாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இந்த முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் முதல்வர் ராமன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி கலந்து கொண்டார். நீதிபதி இந்திரஜித், மூத்த வழக்கறிஞர் செங்கோட்டையன், பெருந்துறை அறக்கட்டளையின் தலைவர் பல்லவி பரமசிவன், விஜயமங்கலம் பாரதி இன்டர்நெஸ்னல் பள்ளி முதல்வர் உமாதேவி ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டனர்.

மேலும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாடிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இம்முகாம் மற்றும் விழா ஏற்பாடுகளை ஈரோடு எக்ஸலென்ஸ் அகாடமியின் செயலர் பிரதிப்குமார் மற்றும் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அத்தீஸ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 30 April 2024 5:45 AM GMT

Related News