/* */

39 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்: ராஜேஷ்குமார் எம்.பி

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள 39 வார்டுகளிலும், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என எம்.பி ராஜேஷ்குமார் பேசினார்.

HIGHLIGHTS

39 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்: ராஜேஷ்குமார் எம்.பி
X

நாமக்கல் நகராட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று 4ம் தேதி கடைசி நாளாகும். நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 6 வார்டுகளை ஒதுக்கீடு போக, மீதமுள்ள 33 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதையொட்டி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் திமுக நகராட்சி தேர்தல் தலைமை அலுவகம் திறப்பு விழா, நாமக்கல் மோகனூர் ரோட்டில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளது. பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ் வசதி, கொரோனா நிவாரண உதவி உள்ளிட்ட திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் நாமக்கல் நகருக்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதாக அறிவித்தார்கள். ஆனால் அமைக்கவில்லை. தற்போது புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழக முதல்வர் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நாமக்கல் நகராட்சி குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு தற்போது, பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கப்படுகிறது.

கடந்த 7 மாதத்தில் நாமக்கல் நகராட்சிப் பகுதியில் 70 கி.மீ தூரம் ரோடு அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் நகராட்சிப் பொதுமக்கள் அனைவரும் திமுகவிற்கு ஓட்டுப்போட தயாராகிவிட்டனர். எனவே நாமக்கல் நகராட்சியில் உள்ள 39வது வார்டுகளிலும், திமுக கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுவார்கள் என்று கூறினார். தேர்தல் அலுவலகம் திறப்புக்கு பின்னர், முக்கிய பிரமுகர்களும், வேட்பாளர்களும் அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் 33 வேட்பாளர்களும் நாமக்கல் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நகராட்சி 1 வது வார்டு திமுக வேட்பாளராக சத்தியவதி, 7வது வார்டுக்கு கிருஷ்ணபிரியா, 8வது வார்டு அம்சா, 9வது வார்டு நந்தகுமார், 10வது வார்டு சிவகுமார், 4வது வார்டு சசிகலா, 5வது வார்டு கிருஷ்ணமூர்த்தி, 11வது வார்டு பூபதி, 12வது வார்டு சுரேஷ்குமார், 16வது வார்டு நளினி, 15வது வார்டு சந்ததிரசேகர், 17வது வார்டு கலைச்செல்வி, 18வது வார்டு இந்திராணி, 19வது வார்டு கிருஷ்ணமூர்த்தி, 20வது வார்டு விஸ்வநாதன், 21வது வார்டு பாலசுப்ரமணியன், 23வது வார்டு செல்வகுமார், 24வது வார்டு நந்தினிதேவி, 26வது வார்டு சகுந்தலா, 27வது வார்டு ரூபாபாலாஜி, 28வது வார்டு லீலாவதி, 29வது வார்டு ராஜேஷ்வரி, 30வது வார்டு கலாநிதி, 31வது வார்டு ஜெயமணி, 32வது வார்டு சரோஜா, 33வது வார்டு கிருஷ்ணலட்சுமி, 34வது வார்டு இளம்பரிதி, 35வது வார்டு கமலா தர்மலிங்கம், 36வது வார்டு டாக்டர் விஜய் ஆனந்த், 37வது வார்டு லட்சுமி, 38வது வார்டு ஈஸ்வரன், 39வது வார்டு தேவராஜன் ஆகியோர் திமுக கவுன்சிலர் பதவிக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் இளங்கோவன், மாநில நிர்வாகிகள் மணிமாறன், ராணி, முன்னாள் நகராட்சித் தலைவர் கரிகாலன், வக்கீல் அய்யாவு, தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், புதுச்சத்திரம் ஒன்றிய பொறுப்பளர் கவுதம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...