/* */

இன்று 3வது ஞாயிறு முழு ஊரடங்கு: நாமக்கல் மாவட்டத்தில் ரோடுகள் வெறிச்...

இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா முழு ஊரடங்கால், நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடியது.

HIGHLIGHTS

இன்று 3வது ஞாயிறு முழு ஊரடங்கு: நாமக்கல் மாவட்டத்தில் ரோடுகள் வெறிச்...
X

கொரோனா முழு ஊரடங்கால் நாமக்கல் நகரில் உள்ள முக்கிய ரோடுகள் அனைத்தும், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 3வது ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், சனிக்கிழமை நள்ளிரவு முதல் பஸ்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை நேரத்தில் மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பரபரப்பாக வாங்கிச்சென்றனர்.

இன்று ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், உழவர் சந்தை, காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அனைத்து மெயின் ரோடுகளும், தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், பால் விற்பனை நிலையங்கள், பத்திரிக்கை விநியோகம், ஓட்டல்கள் முதலிய அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும்.

Updated On: 23 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு