இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில், வருகிற 2022ம் ஆண்டு ஜுலையில் துவங்கும் வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு, வருகிற டிசம்பர் மாதம் 18ம் தேதி தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. ராணுவ கல்லூரியில் சேர அனுமத்திக்கப்படும் போது, அங்கீககரிக்கப்பட்ட பள்ளியில், 7ம் வகுப்பு தேறிய அல்லது 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும், 02.07.2009-க்கும் 01.01.2011-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த (அதாவது 01.07.2022 அன்று 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்). ஆண் சிறுவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்விற்கான விண்ணப்ப படிவம், விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். கட்டணம் எஸ்பிஐ, டெராடூன், உத்தரகண்ட் மாநிலத்தில் மாற்றத்தக்க வகையில், செக்காகவோ, இந்த ஆர்ஐஎம்சி.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் மூலமாகவோ செலத்தி, தி கமாண்டண்ட், ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ், டேராடூன் கண்டோன்மென்ட், டேராடூன் - 248 003, உத்தரகண்ட் மாநிலம், என்ற முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப கட்டணம் பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் ஸ்பீட் போஸ்டில் பெற ரூ.600- ம், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் ரூ.555ம், ஜாதிச்சான்றுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பபடிவம், பிற விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். டேராடூனிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்திசெய்யப்பட்டு கன்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேசன்ஸ், டிஎன்பிஎஸ்சி, சென்னை 600 003 என்ற முகவரிக்கு வருகிற 31ம் தேதி மாலை 5.45 மணிக்கும் சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மற்ற விபரங்களை ஆர்ஐஎம்சி.ஜிஓவி.இன் என்ற இண்டர்நெட் முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

18.12.2021 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்களை கொண்டதாகவும், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே தேர்வு எழுத இயலும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233079 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

 1. அவினாசி
  பணி வரன்முறை செய்யுங்க:அரசுக்கு ஆர்சிஎச் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை
 2. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த திருச்சி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
 4. அவினாசி
  மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு
 5. பவானி
  அரசு விதைப்பண்ணை மூலம் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி: கலெக்டர்...
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 7. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு
 8. சேந்தமங்கலம்
  எருமப்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டம்: 2 தனிப்படையினர் தேடுதல் வேட்டை
 9. பெரியகுளம்
  நெல் அறுவடை, தொடர் உழவுப்பணி: தேனி மாவட்ட விவசாயிகள் சுறுசுறுப்பு
 10. பெருந்தொற்று
  கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு