/* */

கொல்லிமலையில் சாகச சுற்றுலா மையம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

கொல்லிமலையில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் சாகச சுற்றுலா மையம்:   அமைச்சர் மதிவேந்தன் தகவல்
X

அமைச்சர் மதிவேந்தன் பேசிய காட்சி.

திருச்செங்கோட்டை சேர்ந்தவர் தியாகி டி.எம்.காளியண்ணகவுண்டர். இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக பணியாற்றியவர். முதல் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்தவர். தமிழகத்தில் எம்.எல்.ஏ. ஆகவும், எம்.எல்.சி.ஆகவும் பணியாற்றியவர். சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராக செயல்பட்டவர். சுமார் 2 ஆயிரம் பள்ளிகள் அமைக்க காரணமாக இருந்த, காளியண்ணகவுண்டர் கடந்த ஆண்டு மே.29ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு, பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில், நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாக்குழு செயலாளர் டாக்டர் செந்தில் வரவேற்றார். புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், கரூர் எம்.பி ஜோதிமணி, தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசும்போது

ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அக்கரைப்பட்டி கிராமத்தில் பிறந்து, ஜமீன்தாராக இருந்தும் ஏழைகளுக்காக பல்வேறு பணிகளை செய்து, இந்தியாவே போற்றும் தலைவராக வாழ்ந்து தனது 101வது வயதில் மறைந்த காளியண்ண கவுண்டரின் வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, மேட்டூர் அணை கட்டுவதில் பெரும் பங்கு வகித்துள்ளார். காவிரியுடன், சரபங்கா மற்றும் திருமணி முத்தாறு நதிகளை இணைக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும். கொல்லிமலை மலைவாழ் மக்களுக்காக அவரது காலத்தில் அமைக்கப்பட்ட 70 கொண்டை ஊரி வளைவுகளைக்கொண்ட மலைப்பாதை, தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளது. விரைவில், தமிழக முதல்வரின் உதவியால் அங்கு 13 ஏக்கள் பரப்பில் ரூ.2.25 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்படும். கொல்லிமலையை சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் பகுதியில், காளியண்ணகவுண்டருக்கு மணி மண்டபம் அமைக்கவும், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்றார்.

நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, முன்னாள் எம்.எல்.சி. முத்துசாமி, சென்னை ரமணி, அரூர் ராஜா தீர்த்தகிரி கவுண்டர், வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயகுமார், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சூசைராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 29 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு