/* */

50,000 பக்தர்கள் பங்கேற்ற ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேக விழா

நாமக்கல் மாவட்டம் ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

50,000 பக்தர்கள் பங்கேற்ற ஆரியூர் முத்துசாமி கோயில் கும்பாபிஷேக விழா
X
நாமக்கல் மாவட்டம் ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

ஆரியூர் முத்துசாமி கோவிலில் இன்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆரியூரில், பிரசித்தி பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. கொங்கு வேளாளர் சமூக மணியன்குலம், கண்ணந்தைகுல குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், மகா கணபதி, சப்தகன்னிமார், கருப்பண்ணசுவாமி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி உள்ளனர்.

கி.பி.7ம் நூற்றாண்டில், இங்குள்ள ஆலமரத்தின் கீழ், சங்கம் புதரில் உருவான ஸ்ரீ முத்துசாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததை முன்னிட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று காலை 10 மணிக்கு, சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். யானை, குதிரை, பசு உள்ளிட்டவை புடைசூழ 10 கி.மீ. தூரம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

25ம் தேதி காலை 7 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இரவு, 10 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இன்று அதிகாலை 4 மணிக்கு, புனித தீர்த்தம் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, ஸ்ரீ மகா கணபதி, சப்தகன்னிமார், முத்துசாமி, கருப்பண்ணசுவாமி ஆலய கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்கு, மகா அபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள்.

கும்பாபிஷேக விழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் திருப்பணிக்குழு தலைவர் பெரியசாமி தலைமையில், மணியன்குலம், கண்ணந்தைகுல குடிபாட்டு மக்கள், ஆரியூர் கிராம கொங்கு வேளாளர் வழிபாட்டு மக்கள் மன்றம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 26 Jan 2023 6:21 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது