/* */

நாமக்கல்லில் ரூ.1 கோடி மதிப்பு 340 கிலோ கஞ்சா கடத்தல்: 5 பேர் கைது

நாமக்கல்லில் ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ரூ.1 கோடி மதிப்பு 340 கிலோ கஞ்சா கடத்தல்: 5 பேர் கைது
X
பைல் படம்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூருக்கு, கஞ்சா கடத்தல் சம்மந்தமாக கிடைத்த தகவலின் பேரில், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டது. தனிப்படையினர் நாமக்கல் - திருச்செங்கோடு மெயின் ரோட்டில் எர்ணாபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருச்செங்கோடு பக்கமிருந்து வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 280 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தில் இருந்தவர்களை விசாரித்ததில், அவர்கள் குமரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (41), திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயவீரன் (30), நல்லூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த ராணி (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வரும்வழியில் 2 பேரிடம் கஞ்சாவை விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது. அதன்பேரில் ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தி (39), ராஜீ (61) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் உசிலம்பட்டியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் மூலமாக கஞ்சாவை வாங்கியது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கஞ்சாவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 28 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!