/* */

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிசியோதெரபி மருத்துவ முகாம்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிசியோதெரபி மருத்துவ முகாம்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75வது தேசிய மாணவர் படை தினத்தையொட்டி ஈரோடு 15வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் கர்னல் ஜெய்தீப் மற்றும் அலுவலக நிர்வாக அலுவலர் கர்னல் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல் படி என்.சிசி. மாணவர்களுக்கு பிசியோதெரபி மருத்துவ முகாம் தலைமையாசிரியர் ஆடலரசு என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று மாணவர்களுக்கு பிசியோதெரபி பயிற்சி கொடுத்தார். என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி முகாமை ஒருங்கிணைக்க, பி.டி.ஏ. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 27 ஆண்டுகளுக்கு பின் அரசு ஆண்கள் பள்ளியில் என்.சி.சி. படை துவக்கப்பட்டது.

இது குறித்து குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கூறுகையில், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செட்டியாக்கவுண்டர் என்ற என்.சி.சி. அலுவலர் இருந்து மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தார். அவருக்கு பின் 1990 முதல் 2017 வரை என்.சி.சி. அலுவலர்கள் இல்லை. என்.சி.சி. மாணவர்களும் இல்லை. அதற்கு பின் நான் பணியில் சேர்ந்தேன். ஈரோடு 15வது பட்டாலியன் வழிகாட்டுதல் படி ஆண்டுக்கு 50 மாணவர்கள் வீதம் பல போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து வருகிறேன்.

தற்போது 6வது ஆண்டு நடைபெற்று வருகிறது. 5 பேட்ச் மாணவர்கள் 250 பயிற்சி முடித்துள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி கழட்டி மீண்டும் பூட்டுதல், துப்பாக்கியின் சக்திக்கு ஏற்றார் போல் எதிரி இருக்கும் இடத்தின் தூரம் கணக்கிடுதல், மார்ச் பாஸ்ட் எனப்படும் நடைபயிற்சி, 5 மீட்டர் ஷுட்டில் எனப்படும் திரும்ப, திரும்ப ஓடுதல், ஓட்டப்பந்தயம், உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பள்ளி அளவில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு " ஏ "சான்றிதழும், கல்லூரி அளவிலான பயிற்சி முடித்த மாணவர்களுக்கு " பி மற்றும் சி " சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் அரசு பணியிடம் கிடைக்க 5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தருகிறது. மேலும் ராணுவம், கப்பற்படை, விமானப்படை, ரயில்வே ஆகியவற்றில் சேரவும் இந்த சான்றிதழ் மிகவும் உறுதுணையாக உள்ளது. ராணுவத்தில் டாக்டராக பணியில் சேர மருத்துவபடிப்பு படிக்கவும் இந்த சான்றிதழ் உபயோகமாக உள்ளது. பள்ளிகளில் இரண்டு ஆண்டு பயிற்சியும், கல்லூரி அளவில் மூன்று ஆண்டு பயிற்சியும் வழங்கபடுகிறது. பயிற்சி முடித்த என்.சி.சி. மாணவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தகுதி உடையவர் ஆவர். பாரத பிரதமர் நரேந்திர மோடி பள்ளி அளவில் என்.சி.சி. மாணவர். முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நடிகர்கள் அஜித், மாதவன் உள்ளிட்ட பலரும் என்.சி.சி. மாணவர்கள். தேச சேவையில் ஒவ்வொருவரும் தன்னை ஈடுபடுத்தி கொள்ள என்.சி.சி. மிகவும் உதவியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் ஈரோடு 15வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஜெய்தீப், லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி ஆணையின் படி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி ஆண்டுக்கு 50 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கி வருகிறார். இவர்களுக்கு என்.சி.சி.ஏ.சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமாக போலீஸ், ராணுவம், ரயில்வே துறையில் 2 முதல் 5 சதவீதம் அரசு பணி நியமனத்தில் இட உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தலைமை ஆசிரியர் ஆடலரசு, பட்டாலியன் ஹவில்தார் தேவராஜ், கார்த்தி, விடியல் ஆரம்பம் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

பிசியோதெரபி டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று முதலுதவி செய்யும் முறை, மருந்துகள் இல்லா மருத்துவம் குறித்து செயல்விளக்கம் கொடுத்ததுடன் 50 என்.சி.சி. மாணவர்களுக்கு நோட்டுகள், பேனாக்கள், மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

Updated On: 16 Oct 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி