/* */

சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 75 பேரை வழியனுப்பிய ஐயப்ப சேவா சங்கத்தினர்

சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 75 பேரை ஐயப்ப சேவா சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.

HIGHLIGHTS

சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 75 பேரை வழியனுப்பிய ஐயப்ப சேவா சங்கத்தினர்
X

சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 75 பேரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் குமாரபாளையத்தில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.

சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 75 பேரை ஐயப்ப சேவா சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாத பிறப்பு வரை, கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மகர விளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம். குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலை சேவைக்கு சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 75 பேர் சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது. ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலர் ஜெகதீஸ் கூறியதாவது:

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம். இவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், அவசர சிகிச்சை வழங்குதல், பிராணவாயு அறையில் ஆக்சிஜன் கொடுத்தல், உயிர் நீத்தாரை அவரது உடலை சொந்த ஊரில் கொண்டு போய் சேர்த்தல், புண்ணிய பூங்காவனம் எனப்படும் ஐயப்பன் கோவில் வளாகம் முழுதும் தூய்மை படுத்தும் பணி செய்தல், என்பது உள்ளிட்ட பணிகள் செய்வார்கள். இவர்கள் 11 நாட்கள் செய்து திரும்புவார்கள். அதன் பின் அடுத்த குழுவினர் செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மத்திய மாநில துணை தலைவர் பாலசுப்ரமணி, மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன்காந்த், நிர்வாகிகள் நாராயணன், சக்திவேல், சிவகுமார், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சபரிமலைக்கு 11 டன் உணவுப்பொருட்கள்

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தார் சார்பில் 11 டன் உணவுப்பொருட்கள் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தார் சார்பில் ஆண்டுதோறும் அன்னதானத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்குதல், கோவிலில் சேவை செய்ய கல்லூரி மாணவர்களை அனுப்பி வைத்தல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்யப்படுகின்றன. இதில் ஒரு கட்டமாக வைகாசி மாத சபரிமலை அன்னதானத்திற்கு நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தார் சார்பில் 11 டன் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. மத்திய மாநில துணை தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் 118 சேவையாளர்கள் ஒரு பஸ், 4 வேன்கள், ஒரு லாரி, 4 கார்கள் மூலம் புறப்பட்டனர். மாவட்ட தலைவர் பிரபு, பொருளர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் ஐயப்ப சேவா சங்க 2ம் ஆண்டு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜை

பள்ளிபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்க 2ம் ஆண்டு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட ஐம்பெரும் விழா, சங்க தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு யாகம், அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்குதல், மகா திருவிளக்கு பூஜைகள், பஜனை, உபசார வழிபாடு, ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தலைவர் பிரபு சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலர் ஜெகதீஸ் இலவச வேட்டி சேலைகள் வழங்கி சேவைப்பணிகளை துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 18 Nov 2022 1:24 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்