மதுரை அருகே இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் நூதன திருட்டு

மதுரை அருகே அலங்காநல்லூரில், இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் நூதன முறையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை அருகே இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் நூதன திருட்டு
X

அலங்காநல்லூரில்,  இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடையில், பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து திசைதிருப்பி பணத்தை திருடி செல்லும் வாலிபர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில், இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இதை, பாட்ஷா என்பவர் நடத்தி வருகிறார். அவரது கடைக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் உதிரிபாகங்கள் வாங்குவது போல கடை உரிமையாளரான பாட்ஷாவிடம் பேச்சு கொடுத்து, அவரை திசைதிருப்பினார்,

கடை உரிமையாளர் பாட்ஷா வெளியே சென்று மீண்டும் கடைக்கு திரும்புவதற்குள், அந்த வாலிபர் கடைக்குள் புகுந்து கல்லாபெட்டியிலிருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி, உள்ளாடைக்குள் மறைத்து வைத்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல், அங்கிருந்து வாலிபார் சென்றுவிட்டார். இக்காட்சிகள், அங்குள்ள சி.சி.டி.வி-யில் பதிவாகின. அதன் அடிப்படையில், திருடிய வாலிபரை அலங்காநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!
 2. மதுரை மாநகர்
  பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்
 3. மயிலாடுதுறை
  சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 4. பரமக்குடி
  பாத்திமா அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன்...
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பள்ளி விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா பங்கேற்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் இம் மாதம் 22-ல் மினி மாரத்தான் போட்டி:
 7. மேலூர்
  மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா
 8. மேலூர்
  மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது
 9. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு