/* */

மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு மீனாட்சி பெயர்சூட்ட பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் மத்திய அரசு சார்ந்துள்ள திட்டங்கள் தொடங்கி வைக்க பிரதமர் மோடியை முதல்வர் அழைக்க வேண்டும்

HIGHLIGHTS

மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு மீனாட்சி பெயர்சூட்ட பாஜக வலியுறுத்தல்
X

மதுரையில் நடந்த பாஜக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய மாநகர பாஜக தலைவர் டாக்டர் சரவணன்

மதுரை பெரியார் பஸ்நிலையத்துக்கு மீனாட்சி பெயர் சூட்ட வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது..

மதுரையில் மதுரை மாநகர் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என்று பெயரிட்டு, அதன் தொடக்க விழாவிற்கு பாரத பிரதமர் மோடி அவர்களை அழைத்துவந்து தொடங்கவேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல், மத்திய அரசு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பாரத பிரதமரின் புகைப்படம் இல்லாமல் செயல்படுத்தினால், அலுவலகத்தை முற்றுகை போராட்டம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் அவலநிலையை கண்டிப்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களிடம் பாஜக மதுரை மாநகர் தலைவர் டாக்டர் சரவணன் மேலும் கூறுகையில்,

முல்லை பெரியார் அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும். ஆனால், 138 அடியிலேயே இரவோடு இரவாக தமிழக அரசு, கேரள அரசுடன் திருட்டுத்தனமாக கைகோத்து திறந்து விட்டனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தல். தொடர்ந்து, இருபத்தி ஐந்து மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளனர். ஆனால், தமிழக அரசு குறைக்கவில்லை விடியல் அரசு என்று கூறிவிட்டு மக்களுக்கு விடியல் இல்ல அரசாக உள்ளது, அதனைக் கண்டித்து இந்த வாரம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.

நான்கு வழிச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, மதுரை விரகனூர் பகுதியில் வெண்கல சிலை அமைக்க வேண்டும். மதுரை பெரியார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில், எவ்வாறு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என்ற பெயர் சூட்டுவதால் பிரச்னை எதுவும் இல்லை. பலர் தங்களது பெயரை காலப்போக்கில் மாற்றுகின்றனர். நமது தமிழக முதல்வர் கூட பெயரை மாற்றியுள்ளார். அதனால் பெயர் மாற்று வதால் எந்த பிரச்னையும் வராது. மதுரை கோயில் நகரம். எனவே , தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.

தமிழகம் இந்தியாவிற்குள் தான் உள்ளது மத்திய அரசை சார்ந்தே மாநில உள்ளது. தமிழக முதல்வர் வெள்ள நிவாரண நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். மாநில அரசு மத்திய அரசை சார்ந்தே உள்ளது அதனால், மத்திய அரசு சார்ந்து உள்ள திட்டங்கள் துவங்கி வைக்க பிரதமர் மோடியை கூப்பிட வேண்டும்.

மாநில அரசுக்கு மத்திய அரசு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும். எதிர்க்கட்சியாக இருப்பதால் ஒதுக்கி வைக்காது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு கூடிய விரைவில் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் அகதி, அவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவரை புறம்தள்ளி மறந்துவிட்டது. அவர் அரசியல் உள்ளார் என்பதை நினைவூட்டுவதற்காகவே கடுமையாக பேசியுள்ளார். அவர் மதுரையில் கால் வைக்க முடியாது.

ஜெய் பீம் படத்தில் சூர்யாவுக்கு எதிராக சர்ச்சைகள் எழும் பொழுது அவரை தாக்குப் பவருக்கு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் கால் வைத்தால் அவரை தாக்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என மதுரை பாஜக சார்பில் அறிவிக்கிறோம். திமுக அமைச்சர் கே என் நேரு கம்யூனிஸ்ட் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்து, அவதூறாக பேசியதை மதுரை பாஜக கண்டிக்கின்றது.

கூட்டணி கட்சிகள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். சு.வெங்கடேசன் தமிழ் குறித்து பல்வேறு கடிதங்களை மத்திய அமைச்சர்களுக்கு அனுப்புகிறார். ஆனால், இந்த சம்பவத்திற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவிக்கவில்லை. கூட்டணி கட்சி என்பதால் இறங்கி செல்கிறீர்கள். வைகோ மற்றும் திருமாவளவன் மக்களுக்காக போராடவில்லை. ஓட்டு வங்கிக்காக மட்டுமே கூட்டணி வைத்து செல்கின்றனர் என்றார் சரவணன்.

Updated On: 28 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!