/* */

மதுரை பாலம் இடிந்து விழுந்த இடத்தை என்.ஐ.டி குழு ஆய்வு

திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர் இன்று நாரயரணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மதுரை பாலம் இடிந்து விழுந்த இடத்தை என்.ஐ.டி  குழு ஆய்வு
X

விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்யும் என் ஐ டி பேராசிரியர் .

மதுரை புது நத்தம் சாலையில், கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆக.28 ம் தேதி மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானதில், ஒரு தொழிலாளர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில், இதுவரை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஜெ.எம்.சி. புராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர் இன்று நாரயரணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். விபத்திற்கு காரணமாக கூறப்படும் ஹைட்ராலிக் ஜாக்கியின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 31 Aug 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...