/* */

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் இடம் தேர்வு: 3 அமைச்சர்கள் நேரில் ஆய்வு

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு இடம் தேர்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்  இடம் தேர்வு: 3 அமைச்சர்கள் நேரில் ஆய்வு
X

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு இடம் தேர்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

மதுரை:

மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்காக மதுரை நகர் பகுதிகளில் 6 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அதில், எந்த இடத்தில் நூலகம் அமைக்கலாம் என்பது குறித்து தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.

மதுரை மாட்டுதாவனி பேருந்து நிலையம் அருகில், உலக தமிழ்ச்சங்க வளாகம் அருகில், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி அருகில், மாநகராட்சி பொது பண்டக சாலை, எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலை உள்ளிட்ட 6 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில் 6 இடத்தையும் நேரில் ஆய்வு செய்து இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர்கள் தெரிவித்ததாவது:

மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக 6 இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக வந்து செல்லும் வகையிலும் சாலை வசதி கொண்ட இடத்தை தேர்வு செய்யப்படும். முழுவதும் குளிரூட்டப்பட்ட 7 தளங்களை கொண்டதாக கலைஞர் நூலகம் அமைய உள்ளது. 24 பகுதியாக பிரிக்கப்பட்டு நூலகம் அமைய உள்ளது. ஒரே நேரத்தில் 600 வாசகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நூலகம் அமைக்கப்டுகிறது. கலைஞர் நூலகம் அமையும் இடத்தை முதல்வர் தேர்வு செய்வார். இடம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும். தமிழ் வளர்த்த மதுரையில் தமிழாக வாழ்ந்த கலைஞருக்கு நூலகம் அமைவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

Updated On: 26 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...