/* */

ஓசூரில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி, ஆர்ப்பாட்டம்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக்கோரி பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஓசூரில் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஓசூரில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி, ஆர்ப்பாட்டம்
X
பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதை தடுக்க கோரி பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஓசூரில் பேரணி முற்றுகைப் போராட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க கோரியும், அந்த அணை கட்டுவதற்கு ஆதரவாக கர்நாடக மாநில காங்கிரசார் பேரணி நடத்துவதை கண்டித்தும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நேற்று திருவாரூரில் பேரணி துவங்கியது. அந்த பேரணி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக மாநில எல்லையில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய பி.ஆர். பாண்டியன், தமிழகத்தில் காவிரி முல்லைப் பெரியாறு பிரச்சினையை வைத்து அரசியல் சதிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறது. பாரதிய ஜனதா கட்சி தமிழர்களுக்கு எதிராக பாஜக கட்சி காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்து சதி செயலில் ஈடுபடுகிறார்கள். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று கூடி காவிரி முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் சட்டபடி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அறிவித்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் கட்டுப்பாட்டில் காவிரி அணைகள் இருக்கும்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சிவகுமார் பாதயாத்திரை நடத்துவதும், அவரை அழகிரி ஆதரிப்பதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்கு 2019 தேர்தலில் வாழ்வளித்த வாக்காளர்கள் தான் விவசாயிகள் வீதியில் நின்று போராடுகிறோம்; எச்சரிக்கை செய்கிறோம். இனி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் அனுமதி இல்லை; அனுமதிக்கமாட்டோம். தமிழகத்தில் பாஜாகவுக்கு ஏற்படுத்திய அதே எதிர்ப்பு நிலையை காங்கிரஸ் கட்சிக்கும் உருவாக்குவோம் தமிழக கட்சிகள் காங்கிரசோடு, பாஜாகவோடு கூட்டணி அமைப்பது குறித்து மறுபரிசிலனை செய்ய வேண்டும். மறுத்தால் தமிழக்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நாங்களே கூட்டுவோம்.

அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக காவிரி, முல்லைப் பெரியாறு தமிழக உரிமையை சட்டப்படியான தீர்ப்பை உறுதிப்படுத்துவதற்கு காவிரி உரிமையையும், முல்லைப் பெரியாறு உரிமையையும் மீட்டெடுப்பதற்காக நாங்கள் நடத்த இருக்கிறோம். அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக தமிழக அரசு கண்டிக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளிக்க தமிழகம் முதல்வர் முன்வர வேண்டும். கூட்டணி என்கிற பேரில் மௌனத்தை கலைக்க வேண்டும். மௌனம் நீடிக்கக் கூடாது. கூட்டணிக் கட்சிகள் என்கிற பேரில் அரசியல் கட்சிகள் போராட்ட களத்திற்கு வராமல் தவிர்ப்பது தமிழக உரிமைகளை இழப்பதற்கு வழிவகுத்துவிடும் என எச்சரிக்கிறோம். ஒன்றுபடுங்கள் மறுத்தால் அனைத்துக் கட்சிகள் இணைந்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் செய்யவந்த விவசாயிகளை மாநில எல்லையான உள் வட்ட சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி சேலம் டிஐஜி பிரவின்குமார் அபினவு தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 19 Jan 2022 9:51 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்