/* */

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கத்தி, குடுவைகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் அகழாய்வின் போது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கத்தி துண்டுகள், குடுவைகள் மற்றும் குவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட   கத்தி, குடுவைகள் கண்டுபிடிப்பு
X

கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால கத்தி துண்டுகள், குடுவைகள் மற்றும் குவளைகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை மற்றும் கீழடி, கொந்தகை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு துவங்கப்பட்டது. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த அகழாய்வில், 70 செ.மீ., நீளம் உள்ள இரும்பு வாளும், நான்கு பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மூன்று கால்கள் உள்ள 4 சிறிய குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:

மயிலாடும்பாறை சானாரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 300க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கற்திட்டைகளும், கற்பதுக்கைளும் காணப்படுகின்றன. கடந்த 1980 மற்றும், 2003ல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில் இவை புதிய கற்காலத்தை சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதம் ஆய்வு மேற்கொண்டதில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், நான்கு மண் பானைகளும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அதே பகுதியில் இறந்தவர்களை புதைக்கும் குழியின் நான்கு மூலைகளிலும் 3 கத்தி துண்டுகளும், மூன்று கால்கள் உள்ள 4 சிறிய குடுவைகளும், ஒரு தண்ணீர் குவளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் கூறினார்.

Updated On: 22 July 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது