/* */

17,740 மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை: கரூர் மாவட்ட ஆட்சியர்..!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் வளரிளம் பெண்களிடையே ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டமான "உதிரம் உயர்த்துவோம்" திட்டத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

17,740 மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை: கரூர் மாவட்ட ஆட்சியர்..!
X

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் வளரிளம் பெண்களிடையே ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டமான "உதிரம் உயர்த்துவோம்" திட்டத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தமிழக அரசின் அனுமதியுடன் திட்டம் குறித்த முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, பெற்றோர்கள் ஒப்புதலுடன் தீவிர பிரச்சனையை சரிசெய்யும் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண் குழந்தைகளான 17,043 மாணவிகளில், 7716 பேரை மாதிரியாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கரூர் மாவட்டத்தில் 45 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ரத்தசோகை குறைபாட்டை கண்டறிந்து குணப்படுத்த இந்தியாவிலேயே முதன் முறையாக கரூர் மாவட்டத்தில் "உதிரம் உயர்த்துவோம்" என்ற முன்னோடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தேசிய அளவில் கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் வளர் இளம் பெண்களுக்கு இரத்த சோகை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டு தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவு படியும், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்தியாவிலே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி செல்லும் வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகை நோயை கண்டறிந்து குணப்படுத்தும் உதிரம் உயர்த்துவோம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது கரூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர்கள் உள்ளடக்கி கூட்டங்கள் மற்றும் பயிலரங்கங்கள் மூலம் விரிவான திட்டமிடலுக்குப் பிறகு இந்த திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் 17,740 மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் ஒப்புதலோடு 175 பள்ளிகளில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 7 அரசு மருத்துவமனைகள், மற்றும் எட்டு சமூக சுகாதார மையங்களில் உள்ள 16 ஆய்வகங்கள் மூலம் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் அறியப்பட்டன. அதன்படி பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் உலக சுகாதார நிறுவன ஆலோசனைப்படி லேசான மற்றும் மிதமான ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் தீவிரமான ரத்த சோகை உள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு தீவிர பாதிப்புள்ள 3 சதவீதம் பேருக்கும், லேசான மற்றும் மிதமான பாதிக்கப்பட்ட 20.5 சதவீதம் பேருக்கும், லேசாக பாதிக்கப்பட்ட 21% பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு நாள்தோறும் இரண்டு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளதுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்குள்ள பல்வேறு பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இத்திட்டம் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னோடி திட்டம் ஆகும் நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவதும் இத்திட்டம் பைலட் திட்டமாக கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு திட்டத்தைமாநில முழுவதும் இதை செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். வளரிளம் பருவப் பெண்களின் இளம் வயதிலேயே ரத்த சோகையை கண்டறிந்து சரி செய்தால் அவர்களின் வாழ்வில் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை, கல்வியை மேம்படுத்துதல் அதன் மூலம் பெண்களுக்கு சமுதாயத்தில் உரிய அதிகாரத்தை அளிக்கும் மிக முக்கியமாக இது கர்ப்ப காலத்தில் இரத்த சோகையை தடுப்பதன் மூலம் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Jun 2023 6:48 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்