குமரி அருகே நகை கடையை உடைத்து கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

குமரியில் நகைகடையை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதில் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரி அருகே நகை கடையை உடைத்து கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
X

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை இயங்கி வருகிறது, இன்று காலை கடையை திறக்க வந்த ராஜகோபால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நித்திரவிளை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்ததில் இன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளையர்கள் இருவர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதே போன்று அப்பகுதியில் விஷ்வம்பரன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு நகைகடையிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த இரு கடைகளிலும் சேர்த்து 15 பவன் நகைகள் கொள்ளையடிக்கபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து குளச்சல் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கராமன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தனிபடை அமைத்து தேடிவருடின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்திரவிளை சந்திப்பிலுள்ள தனியார் ஏடிஎம் மையத்தை உடைக்க முயற்சித்து கொள்ளையர்களை காவல்துறை தேடி வரும் நிலையில் மீண்டும் நிந்திரவிளை சந்திப்பில் நகைகடையில் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் வியாபாரிகள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 13 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

 1. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ்...
 2. சென்னை
  அரைவேட்காடு அண்ணாமலை: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்
 3. செங்கம்
  தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
 4. தென்காசி
  தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி...
 5. சென்னை
  அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
 6. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 7. நாமக்கல்
  தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை: இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
 8. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 9. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 10. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...