காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் போல் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் இன்று பெய்த சிறிது நேர கனமழை மகிழ்ச்சி அளித்துள்ளது.
HIGHLIGHTS

காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் வேளியூர் அருகே கனமழை பெய்து கொண்டிருந்த போது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் திடீரென மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாகவே கடும் கோடை வெப்பம் போல் வானிலை மாற்றம் காணப்பட்டிருந்ததால் பொதுமக்கள் தங்களது தேவைக்காக வெளியே செல்லும் நிலையில் பெருத்த சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.
ஏற்கனவே தமிழகத்தில் இன்ஃபுளுன்ஸ் வைரஸ் காரணமாகவும், கொரோனா பரவி வருவதாக வரும் தகவல்கள் பெருத்த மனக்கவலை அளித்திருந்த நிலையில் வெப்பமும் தங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துமா என்ற அச்சத்துடன் இருந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை குறிப்பாக மூத்த குடிமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் மற்றும் மருத்துவம் நல்வாழ்வு துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மூன்று நாட்களாகவே கடும் கோடை வெப்பம் போல் பொதுமக்கள் அவதி அடையும் நிலையில் வெப்பம் அதிகரித்து இருந்தது.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் கோடை வெயில் இருந்த நிலையில் மதியம் ஒரு மணிக்கு திடீரென கருமேகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த நிலையில் விடுகின்றன கனமழை பெய்து சாலை முழுவதும் நீர் செல்லும் அளவிற்கு கொட்டி தீர்த்தது.
காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை , ஓரிக்கை, வேலியூர் , புரிசை உள்ளிட்ட பகுதிகளிலும் திடீர் மழையை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே இருந்த பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.
தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கு மேல் கன மழை பெய்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடையும் அளவில் இருந்தாலும் தற்போது நவரை நெல் அறுவடை காலம் என்பதால் மழை தாக்கம் குறைவாக இருக்க வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.