/* */

ஈரோடு: கொரோனா மாத்திரை விவகாரத்தில் மேலும் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மர்ம நபர் கொடுத்த கொரோனா மாத்திரை சாப்பிட்டு நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையல் இன்று மேலும 2பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவரது மனைவி மல்லிகா, மகள் தீபா. இவர்களது தோட்டத்து வீட்டின் பணியாளர் குப்பம்மாள். இந்நிலையில், கொரோனா சிகிச்சை முகாமில் இருந்து வருவதாகக்கூறி மர்மநபர், நேற்று வழங்கிய மாத்திரையை சாப்பிட்டதில் மல்லிகா சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.


எஞ்சிய மூன்று பேரில் கருப்பண்ண கவுண்டர் மற்றும் மகள் தீபா ஆகியோர், உடல் நலக்குறைவால், கோவை தனியார் மருத்துவமனையிலும், தோட்ட பணியாள் குப்பம்மாள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், கல்யாணசுந்தரம் மற்றும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போத்திஸ்குமார் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சில மாதங்களுக்கு முன்பு கருப்பண்ண கவுண்டரிடம் இருந்து வாங்கிய 7 லட்சம் ரூபாய் கடனிற்கு அதிக வட்டி கேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த கல்யாண சுந்தரம் அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் போத்தீஸ்குமாரிடம் விஷ மாத்திரை கொடுத்து அனுப்பி கொலை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்த குப்பம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகள் தீபாவும் உயிரிழந்தார். தற்போது, அதே கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கருப்பண்ண கவுண்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1.கருப்பண்ண கவுண்டர் வீடு,

2.உயிரிழந்த மல்லிகா

2.உயிரிழந்த மகள் தீபா,

3.சிகிச்சை பெற்று வரும் கருப்பண்ண கவுண்டர்

Updated On: 27 Jun 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...