/* */

பவானியில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கம்: மாணவ மாணவிகள் அவதி

ஈரோடு மாவட்டம் பவானி அரசு போக்குவரத்து பணிமனையில் 61 பேருந்துகளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

HIGHLIGHTS

பவானியில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கம்: மாணவ மாணவிகள் அவதி
X

பவானி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏற அலைமோதிய பயணிகள் கூட்டம்.

அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் இன்று (28ம் தேதி) மற்றும் நாளை(29ம் தேதி) ஆகிய இரு தினங்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் நாளான இன்று, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பெருமளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பவானி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 61 அரசுப் பேருந்துகளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பவானி பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் வெளியூர் பயணம் செல்லும் பயணிகள் ஆகியோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்வதிலும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பொதுமக்கள் பயணம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Updated On: 28 March 2022 12:41 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்