/* */

ஈரோடு: ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

ஈரோடு அருகே கவுந்தப்பாடியில், ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், காலவரையறையின்றி அப்பள்ளி மூடப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு: ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று
X

கோப்பு படம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், தொற்று குறையத் தொடங்கியதால், முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள், க்டந்த 1-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கவுந்தப்பாடி மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் அந்த பள்ளியில் பணிபுரியும், 41 ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 407 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்றிரவு வரலாம் என்று தெரிகிறது. அதுவரை, பரிசோதனை செய்து கொண்டவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கவுந்தப்பாடி மாதிரி அரசு ஆண்கள் பள்ளி, காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதே நேரம், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மந்தியூர் அடுத்த பருவத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்- 1 படிக்கும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த மாணவர்களுடன் படிக்கும் மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 7 மாணவ -மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!