/* */

அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்

ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்

HIGHLIGHTS

அமைச்சர் முத்துசாமிக்கு  கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்
X

வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சரான முத்துசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளராகவும் உள்ளார். கடந்த சில நாட்களாக அமைச்சர் முத்துசாமி பல்வேறு அரசு திட்ட விழாக்களில் பங்கேற்று வந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வேட்புமனு தாக்கல் செய்த கட்சியினரிடம் நேர்காணல் நடத்தி வந்தார். இதேபோல் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்தும் வார்டு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அமைச்சர் முத்துசாமிக்கு லேசான காய்ச்சலும், உடல் சோர்வும் இருந்தது. இதை தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவு இன்று காலை வந்தது. இதில் அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு லேசான அறிகுறியே இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. இதையடுத்து அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 30 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்