/* */

அந்தியூர் அருகே, கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தி தினமான இன்று,கிராமசபை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே, கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
X

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு பேசினார்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. செம்புளிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த இக்கூட்டத்திற்கு அந்தியூர் தாசில்தார் தாமோதரன், பிரம்மதேசம் ஊராட்சி மன்றத்தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார்.


இக்கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசுகையில், கிராம சபை கூட்டமானது, ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, மே தினம் மற்றும் காந்தி ஜெயந்தி அன்று நடந்து வருகிறது. அதனடிப்படையில் காந்தி ஜெயந்தி நாளான இன்று (அக்.,2) ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. ஊரகப் பகுதிகளில் மழை நீரினை சேமிப்பதினை முனைப்புடன் செயல்படுத்த, அனைவரும் இணைந்து செயல்பட்டு மழைநீர் சேகரிப்பினை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும், எதிர்வரும் பருவமழைக் காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்திடும் பொருட்டு அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொதுக் கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும். ஏற்கனவே, நிறுவப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், அடைப்புகள் ஏதுமின்றி பராமரிக்கப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட வேண்டும்.


முறையாக ஊரகப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து குக்கிராமங்களிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்து, தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் தெளிந்த நீர்த்தொட்டி, பயன்பாடற்ற பானைகள், குளிர்சாதன பெட்டி பின்புறம், பழைய டயர், தேங்காய் மட்டைகள், செடிகள் வளரும் தொட்டி ஆகியவற்றில் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். மேலும், புதிய கட்டுமான பணிகள் நடக்குமிடங்கள் மற்றும் இதர தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமலும், அவற்றை முறையாக அகற்றியும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக தாழ்வான மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளங்கண்டு அவ்விடங்களில் மழைநீர் தடைபடாமல் செல்லும் வகையில் வழியேற்ற வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களை முறையே சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புயல் பாதுதுகாப்பு மையங்களில் குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை முறையே பயன்படுத்திடும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, மழைநீர் வழிந்தோடுவதற்கான வழிவகை செய்ய வேண்டும். தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், ஏரிகள், பாசன ஏரிகள், குளம், குட்டைகள் போன்றவற்றின் கரைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒப்புதல் பெறப்பட்டது.


மேலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குடிசைகள் அமைத்து குடியிருப்போர் தொடர்பான கணக்கெடுப்பு பணி முடிவுற்று அதன் அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டது.

விடுபட்ட குடிசைகள் எதேனுமிருப்பின் விபரம் குறித்து முறைப்படி அறிக்கை அனுப்பி இறுதி அறிக்கையினை உறுதி செய்ய வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் (ஊரகம்) தமிழக அரசால் 15-ஆகஸ்ட், 2022 முதல் 02 அக்டோபர் 2022 வரை, தனி நபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, 'நம்ம ஊரு சூப்பர்' என்ற சிறப்பு பிரச்சாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை முழுமையாக தடைசெய்தல் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி இல்லாத கிராமங்களை உருவாக்குதல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன், அனைத்து பொது இடங்களும் குப்பையில்லாமலும், திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருப்பதையும் உறுதிசெய்ள வேண்டும். மேலும், அனைத்து வீடுகளிலும் திடக்கழிவுகள் தரம் பிரிப்பதை உறுதிசெய்தல், தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை மட்டுமே தூய்மை காவலர்கள் சேகரம் செய்தல் மற்றும் திடக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் வழி முறையை மேம்படுத்துதல் வேண்டும்.


அனைத்து சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளின் நிலைத்த மற்றும் நீடித்த செயல்பாட்டை உறுதி செய்வதோடு, கழிப்பறை வசதி, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் கிராம ஊராட்சி நிறைவுற்ற நிலையினை அடைந்திட தேவையான வசதிகளை கண்டறியும் நோக்கில் கிராம ஊராட்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம் மற்றும் அதற்கான திட்ட அறிக்கையினை தயாரிக்க வேண்டும்.ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கென ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும், மாணவ, மாணவியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இடைநிற்றலை தடுக்க வேண்டும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும், குழந்தைகளின் நலனிலும் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை நல்ல முறையில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.மேலும் தங்களின் ஊராட்சி சிறந்த ஊராட்சியாக திகழ்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி தங்களின் ஊராட்சி முன்மாதிரியாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், தமிழக அரசால் வழங்கப்படக்கூடிய சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெற வேண்டும் என தெரிவித்தார்.


முன்னதாக கலெக்டர், பொது சுகாதாரம், வேளாண்மை- உழவர் நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிந்த கண்காட்சியினை பார்வையிட்டார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் சண்முக சுந்தரம், உதவி இயக்குநர் சூரியா, செயற்பொறியாளர் விஸ்வநாதன், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ராஜலட்சுமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்