/* */

தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

HIGHLIGHTS

தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்
X

பவானிசாகர் அணை(பைல் படம்).

பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 21 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியில் இருந்து வருகிறது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து வந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 100.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,124 கன வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடியும் என மொத்தம் ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 18 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!