Begin typing your search above and press return to search.
பவானிசாகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் தொழிலாளி பலி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நடந்து சென்ற டீ மாஸ்டர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS

பைல் படம்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 49). இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நால் ரோட்டில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பூர்ரோட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த முனீஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.