திம்பம் மலைப்பகுதியில் கர்நாடக அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

திம்பம் மலைப்பகுதியில் கர்நாடக அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து; தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திம்பம் மலைப்பகுதியில் கர்நாடக அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து
X

திம்பம் 5-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது அரிசி பாரம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவு கொண்டது. இந்த திம்பம் மலைப்பகுதி வழியே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

இந்நிலையில் கர்நாடக அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலிருந்து கர்நாடக நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது திம்பம் 5-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது அரிசி பாரம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

‌‌இந்த விபத்தில் பேருந்து மீது மோதிய லாரி பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 1:30 PM GMT

Related News