/* */

ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்குகளை பதிவு செய்தது பவானி தொகுதி

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பவானி சட்டமன்றத் தொகுதி அதிக வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்குகளை பதிவு செய்தது பவானி தொகுதி
X

ஈரோடு மாவட்ட வரைபடம்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பவானி சட்டமன்றத் தொகுதி அதிக வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் என 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 66 ஆயிரத்து 496 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகள் 198 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.05 சதவீதமும், ஈரோடு மேற்கு தொகுதியில் 65.72 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 76.27 சதவீதமும், பெருந்துறை தொகுதியில் 77.70 சதவீதமும், பவானி தொகுதியில் 78.97 சதவீதமும், அந்தியூர் தொகுதியில் 76.59 சதவீதமும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 78.52 சதவீதமும், பவானிசாகர் தொகுதியில்76.08 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

இதில்,அதிகபட்சமாக பவானியில் 78.97 சதவீதமும், குறைவாக ஈரோடு மேற்கு தொகுதியில் 65.72 சதவீதமும் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 April 2024 3:49 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு