/* */

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

HIGHLIGHTS

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு:  அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்
X

சேதமடைந்த வீடு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 52). இவரது மனைவி நித்தியா (வயது 40) இவர்களுக்கு காவியா (வயது 18), பவித்ரா ( வயது 20) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரியின் தந்தை முருகன் (வயது 75) என்பவரும் வசித்து வருகிறார். ஈஸ்வரன் தனது வீட்டிலேயே கைத்தறியில் பட்டுப்புடவை நெய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீடு மண்ணால் ஆன ஓட்டு வீடு ஆகும்.

இந்நிலையில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈஸ்வரனின் மண் வீடு ஈரப்பதம் காரணமாக உறுதி தன்மையை இழந்து வந்தது. இந்நிலையில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீட்டின் உறுதி தன்மை மேலும் வலுவிழந்தது.

மழை பெய்தபோது ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வீட்டின் ஓடுகள் சரிந்து விழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து அமுக்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது.

சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று இரவு தங்கினர். இதுபற்றி தெரியவந்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று ஈஸ்வரனுக்கு ஆறுதல் கூறினர். மேலும் வீடு இடிந்து விழுந்ததில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 12 பட்டு சேலைகள் தயார் செய்ய வைத்திருந்த நூல் பாவு சேதம் அடைந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு