Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் 28 சமையலர் தேர்வுப்பணி ரத்து
ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசு விடுதிகளில் காலியாக உள்ள 28 சமையலர் தேர்வுப்பணி ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.
HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசு விடுதிகளில் காலியாக உள்ள 17 ஆண், 11 பெண் என 28 சமையலர் பணியிடம் நிரப்ப திட்டமிடப்பட்டது. மாவட்ட வேலை வாய்ப்பக அலுவலகத்தில் இருந்தும், நேரடியாகவும் விண்ணப்பம் பெறப்பட்டது. இவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2020 ஜனவரி மாதம் நேர்காணல் நடந்தது. இதற்கான தேர்வுப்பணிகள், மாநில அளவிலான தேர்வுக்குழுவால் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பட்டியல் பெற்று, ஆறு மாதங்களுக்கு மேல் ஆனதாலும், நிர்வாக காரணத்தாலும், தேர்வுப்பணி ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.