கோபிச்செட்டிப்பாளையம் அருகே 14 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோபிச்செட்டிப்பாளையம் அருகே 14 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
X

கொள்ளை நடந்த வீடு.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள புதுப்பாளையம் தங்கமணி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு வெங்கடாசலம், ரகுநாதன் என்ற 2 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற ஒரு மகளும் உள்ளனர். வெங்கடாசலம் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரகுநாதன் பழனியம்மாள் வீட்டின் அருகில் குடியிருந்து லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பழனியம்மாள் 2 நாட்களுக்கு முன்பு, கோவையில் உள்ள வெங்கடாசலம் வீட்டிற்கு சென்று விட்டு , இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 14 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, கோபிச்செட்டிப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Updated On: 25 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார்...
 2. திருவண்ணாமலை
  மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட...
 3. நாமக்கல்
  வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்:...
 4. நாமக்கல்
  பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை...
 5. நாமக்கல்
  நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 6. திருப்பரங்குன்றம்
  கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை...
 7. விழுப்புரம்
  விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சாதனை
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம்: மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 9. செங்கம்
  செங்கம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை காணொளி மூலம் துவக்கம்
 10. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை