/* */

எந்த அடிப்படை வசதியும் இல்லாது தவிக்கும் மலைகிராம மக்கள்

சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

HIGHLIGHTS

எந்த அடிப்படை வசதியும் இல்லாது தவிக்கும் மலைகிராம மக்கள்
X

அடிப்படை வசதியின்றி வாழும் மலைகிராம மக்கள் 

தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.

மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில், படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.

மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.

ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.

சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 25 Nov 2023 4:32 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு