/* */

அரூரில் 9 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது

தருமபுரி மாவட்டம் அரூரில், இன்று ஒன்பது இடங்களில் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரூரில் 9 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது
X

அரூர் பகுதியில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஒன்பது கிராமங்களில் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவக்குழு சார்பில், பச்சினாம்பட்டி, நாசன்கொட்டாய், சின்னாங்குப்பம், கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, கீரைப்பட்டி, நரிப்பள்ளி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், மருத்துவக்குழுவினர் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வெப்பநிலை, உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

Updated On: 28 Jun 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!