/* */

தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனை: 4 பேர் மீது வழக்கு

தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனையில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனை: 4 பேர் மீது வழக்கு
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் செல்லியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைசாமி,72. விவசாயி. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மதலைமுத்து அவரது மனைவி மோட்சம் மேரி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளாக வழித்தட பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 27ஆம் தேதி மாலை 5 மணி அளவில் குழந்தைசாமி தனது இருசக்கர வாகனத்தில் தர்மபுரி- பாலக்கோடு ரோட்டில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மதலை முத்து மகன் அலெக்சாண்டர் மற்றும் அவரது அம்மா மோட்சம் மேரி ஆகிய இருவரும் வண்டியை நிறுத்தி தகாத வார்த்தையால் திட்டி அடித்துள்ளனர்.

மேலும் கத்தியால் கிழித்துள்ளனர். அலெக்சாண்டருடைய மனைவி ஜான்சி அவரது தந்தை மதலைமுத்து ஆகியோரும் அடித்து கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து குடும்பத்தாருக்கு தகவலின்பேரில் குழந்தைசாமி மகன் சுதாகர் தனது தந்தையை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

குழந்தைசாமி கொடுத்த புகாரின் பேரில் மதி கோன் பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மதலை முத்து அவரது மனைவி மோட்சம் மேரி, மகன் அலெக்சாண்டர் இவரது மனைவி ஜான்சி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Updated On: 31 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்