/* */

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 35 பேருக்கு கலெக்டர் பாராட்டு

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 35 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 35 பேருக்கு கலெக்டர் பாராட்டு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகள்.

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 21 மாணவ, மாணவியர்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.

8 பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு பல் மருத்துவக்கல்லூரிகளில் பி.டி.எஸ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மொத்தம் 35 மாணவ, மாணவியர்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்சினி பேசும் போது, நீங்கள் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு உங்களுக்கு பக்கபலமாக விளங்கிய பெற்றோர்களின் பங்கை நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ படிப்பை முடித்து மக்களுக்கு சேவையாற்றுவதை முக்கியமான கடைமையாக கருத வேண்டும். நீங்கள் அனைவரும் மருத்துவ படிப்புகளை சிறப்புற முடித்திட எனது பாரட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ள 35 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டெதஸ்கோப்பு கருவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மலர்விழி வள்ளல், அரசு தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.சவுண்டம்மாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்