/* */

வயது தடையில்லை: 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்ற தமிழக வீரர் சரத் கமல்

Sharath Kamal World Ranking - காமன்வெல்த் போட்டியில் 40 வயதாகும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

HIGHLIGHTS

வயது தடையில்லை: 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்ற தமிழக வீரர் சரத் கமல்
X

Sharath Kamal World Ranking - காமன்வெல்த் போட்டி 2022ல் இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.

இந்த காமன்வெல்த் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 40 வயதாகும் சரத் கமல் தற்போதும் கூட இளம் வீரர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.

காமன்வெல்த் போட்டியில் அவர் முதலில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் சத்யன் உடன் இணைந்து வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா-வுடன் இணைந்து மற்றொரு தங்கமும் வென்றார்.

இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அவர் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 4 பதக்கம் வென்று சாதனை படைத்த அவருக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் 1982 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். டேபிள் டென்னிஸ் உலகிற்கு இவரை அறிமுகப்படுத்தியது அவரது தந்தையும் மாமாவும். அன்றிலிருந்து இந்த விளையாட்டின் மீது காதல் கொண்டார்.


அவரது சாதனைகள் சில

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர்

2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தார்.

2004ல் அர்ஜுனா விருது

2004 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கமல் தங்கம் வென்ற பிறகு, அவருக்கு நான்காவது உயரிய சிவிலியன் விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 22 வயதில் அர்ஜுனா விருது பெற்ற அவர், அதன்பிறகு சாதனைகளை படைத்து வருகிறார்.

ஏப்ரல் 2020ல் நடந்த ஓமன் ஓபனில் பட்டம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீரராக ஷரத் கமல் அச்சந்தா, தரவரிசையில் ஜி.சத்தியனை பின்னுக்குத் தள்ளி, சிறந்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரராக ஆனார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் இதுவே அவரது முதல் வெற்றியாகும்.

ஒன்பது முறை சீனியர் நேஷனல் சாம்பியனான முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஆனார். இதன் மூலம் எட்டு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற கமலேஷ் மேத்தாவின் சாதனையை முறியடித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Aug 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்