/* */

விருதநகரில் சுகாதார ஊழியர் வரதட்சணை கொடுமை: மனை தர்ணா போராட்டம்

விருதுநகர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு இளநிலை உதவியாளர் வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக கூறி மனைவி தர்ணா.

HIGHLIGHTS

விருதநகரில் சுகாதார ஊழியர் வரதட்சணை கொடுமை: மனை தர்ணா போராட்டம்
X

விருதுநகர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு இளநிலை உதவியாளர் பெருமாள்சாமி மனைவி தனலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

விருதுநகர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு இளநிலை உதவியாளராக பணிபுரியும் பெருமாள்சாமி என்பவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி அவருடைய மனைவி தனலட்சுமி தர்ணா போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி இவருக்கும் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த பெருமாள்சாமி என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பெருமாள்சாமி விருதுநகர் மாவட்டம் துணை இயக்குனர் சுகாதார அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணத்தின் போது பெருமாள்சாமி குடும்பத்தினர் 15 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்கம் என வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனலட்சுமி குடும்பத்தினர் 7 பவுன் நகையும் 2 லட்சம் ரொக்கப் பணமும் கொடுத்து திருமணம் முடித்துள்ளனர். இதையடுத்து தற்போது இன்னும் 3 லட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கணவர் மற்றும் கணவரின் தாயார் கோப்பம்மாள் கணவனின் அக்கா மகாலட்சுமி மாமா ராமச்சந்திரன் தங்கை மோகனப்பிரியா ஆகியோர் கொடுமை படுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறினார்.

இதுகுறித்து மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், புகாரை வாபஸ் பெறச் சொல்லி கணவர் குடும்பத்தார் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தங்கள் குடும்பத்திற்கு எந்த நேரத்திற்கும் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்திருப்பதாகவும் அரசு பணி செய்யும் கணவர் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தும் நிலையில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தனலட்சுமி தனது குடும்பத்தினருடன் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து தனலட்சுமி அவரது குடும்பத்தினர் கலைந்து சென்றனர்.

Updated On: 14 Dec 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!