/* */

சிரிஞ்சி வடிவத்தில் சாக்லேட் : மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

சென்னை, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் புதிய வடிவ சாக்லேட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

HIGHLIGHTS

சிரிஞ்சி வடிவத்தில் சாக்லேட் : மாவட்ட   ஆட்சியர் அதிரடி உத்தரவு
X

சிரிஞ்சியில் அடைக்கப்பட்டு பரபரப்பாக விற்பனையாகும் சாக்லெட்

சிரிஞ்சியை திறந்து பார்த்தால் சாக்லெட்... விருதுநகர் ஆட்சியர் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் தற்போது புதிய வகையான சாக்லேட் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. அது ஊசி சாக்லேட். இதை சிரிஞ்சி சாக்லேட் என்றும் அழைக்கிறார்கள். அதாவது ஊசியில் நிரப்பப்பட்டு இருக்கும் சாக்லேட் ஆகும்.

ஊசி சாக்லேட் பயன்படுத்தாத ஊசியை எடுத்து அதில் பாதி திரவ நிலையில் இருக்கும் கெட்டியான சாக்லேட்டை உள்ளே நிரப்பி விற்கிறார்கள். கூர்மையான ஊசி பகுதி இதில் இருக்காது. பின் பக்கத்தை அழுத்தி அப்படியே சாக்லேட்டை உறிஞ்சி சாப்பிட வேண்டியதுதான். இந்த புதிய வகை சாக்லேட் தமிழ்நாட்டில் திடீரென அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிர்ச்சி ஊசி சாக்லேட்: ஆனால் இது எப்படி செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சாக்லேட் சுகாதாரமான சாக்லேட்தானா என்பது முதல் கேள்வி. அதோடு இந்த சிரிஞ்சி ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டதா , பயன்படுத்தப்படாததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகரில் இது போன்ற சிரிஞ்சி சாக்லேட்டுகளை விற்பனை செய்தவர்களின் கடைகளில் இருந்து அந்த சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சாக்லேட்டுகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த சாக்லேட்டுகள் தரம் பற்றி உணவு பாதுகாப்பு துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் விருதுநகர் மாவட்டத்தில் ஊசி போடும் சிரிஞ்சில் நிரப்பப்பட்ட சாக்லேட்டை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். அதோடு சிகரெட் வடிவ மிட்டாய் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் இந்த சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை நல்லப்ப வாத்தியார் தெருவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிட்டாய் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வண்ணாரப்பேட்டையில் மயில் ஸ்டோர் என்ற பெயரில் மயில் கண்ணன் என்பவர் கடந்த 20 வருடமாக மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் வியாபாரிகள் பலர் ஊசி மிட்டாய் வாங்கி சென்று பல்வேறு இடங்களில் அதை வியாபாரம் செய்துள்ளனர்.

அங்கு போலீசார் சோதனை செய்ததில் பள்ளி மாணவர்கள் பலர் இவரிடம் ஊசி முட்டாய் வாங்கி தின்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் கொடுங்கையூர் போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று வண்ணாரப்பேட்டையில் உள்ள மயில் ஸ்டோர்ஸ் என்ற கடையில் சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் மற்றும் வட சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜபாண்டியன் ஆகியோர் சோதனை செய்தனர்.

எப்படி தயாரிக்கப்படுகிறது: அங்கு இருந்த ஊசி மிட்டாய்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்றுகூடி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். நியாயமான முறையில் நாங்கள் வியாபாரம் செய்கிறோம். நீங்கள் சந்தேகம் இருந்தால் ஊசி மிட்டாய்களை சோதனைக்கு எடுத்துச் செல்லுங்கள். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் என்று தெரிவித்தனர்.

விளக்கம்: இது சம்பந்தமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராபர்ட் தெரிவித்ததாவது, இந்த மிட்டாய் ஊசி வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது. இது மருத்துவத்துறை பயன்படுத்தும் ஊசி கிடையாது. இந்த ஊசி சாக்லேட் கலர் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் சாக்லேட் பிளேவர் மட்டும் பயன்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது .சிறுவர் சிறுமியர்கள் இதை கடையில் வாங்கி சாக்லேட்டை தின்றுவிட்டு அதில் தண்ணீர் ஊற்றி விளையாடுகின்றனர்.

தவறான தகவல்: யாரோ கொடுத்த தவறான தகவலின் பேரில் உணவு அதிகாரிகள் சோதனைக்கு வந்துள்ளனர். அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளித்து உள்ளோம். இங்கிருந்து சாக்லேட்டுகளை சோதனைக்கு அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் இது சம்பந்தமாக தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இங்கு ஆண்டாண்டு காலமாக மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறோம் எந்தவித கலப்படமும் இன்றி மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறோம் . கடந்த கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து படிப்படியாக இப்போதுதான் வியாபாரிகள் மேலே வருகின்றனர் என்று தெரிவித்தார்

Updated On: 27 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  2. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு